3.5 லட்சம் பேர் ரூ.475 கோடி வென்றதாக அறிவிப்பு; தொழில்நுட்ப கோளாறால் நடந்த சம்பவம்
3.5 lakhs lottery players told they won rs.475 crores by techinal fault: தொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜியத்தில் யூரோமில்லியன்ஸ் லொட்டரி வாங்கிய 3,56,906 பேர் ரூ.475 கோடி வென்றதாக தவறான மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
3.5 லட்சம் பேர் ரூ.475 கோடி வென்றதாக தவறுதலாக அறிவிப்பு
பெல்ஜியத்தின் தேசிய லொட்டரியான லொட்டரி நேஷனல், யூரோமில்லியன்ஸ் என்ற லொட்டரியை நடத்தி வருகிறது.

யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் பங்கேற்பவர்கள் 7 எண்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் 1 முதல் 50 வரையிலான ஐந்து எண்களும், லக்கி ஸ்டார்ஸ் என்று அழைக்கப்படும் 1 முதல் 12 வரையிலான 2 கூடுதல் எண்களும் அடங்கும்.
இந்த 7 எண்களையும் சரியாகப் பொருத்தி ஜாக்பாட்டை வெல்வதற்கான வாய்ப்பு 139 மில்லியனில் ஒன்று மட்டுமே ஆகும்.
இந்நிலையில், லொட்டரி வாங்கிய 3,56,906 பேர் வெற்றி பெற்ற 7 எண்களையும் சரியாகக் கணித்ததாகக் லட்சக்கணக்கானோருக்கு தவறாக மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், தொழில்நுட்பப் பிழையின் காரணமாக இந்த தவறான அறிவிப்பு சென்றதாகவும், யாருமே ஜாக்பாட் வெல்லவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசுதொகை வெள்ளிக்கிழமை குலுக்கலுக்கு மாற்றப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த லொட்டரி செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபனி டெலூலின், "பரிசுத் தொகையை எவ்வாறு விநியோகிக்க வேண்டும் என்பது குறித்த தகவல் தொடர்பு பிழையின் காரணமாக இந்தத் தவறு நிகழ்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும், என்ன தவறு நடந்தது என்பதைத் துல்லியமாக விளக்கும் மற்றொரு மின்னஞ்சல் அனுப்பப்படும். லொட்டரியின் சந்தைப்படுத்தல் துறையும் இந்தப் பிரச்சினையைச் சரிசெய்யப் பணியாற்றி வருகிறது" என கூறினார்.