தடை செய்யப்பட்ட இலங்கை வீரர்களின் அதிரடி முடிவு? ஆண்டிற்கு 2 கோடி சம்பளத்துடன் விளையாட திட்டம்: கசிந்த தகவல்
இலங்கை கிரிக்கெட் வீரர்களான குஷால் மெண்டிஸ், தன்சுகா குணதிலகா, நிரோஷன் டிக்வெலா ஆகியோருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் இரண்டு பேர் அமெரிக்காவில் விளையாட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜுன் மாதம் டி20 தொடரில் பங்கேற்பதற்காக, இலங்கை அணி, இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது.
அப்போது ஹோட்டலில் பயோ-பபுள் சூழலில்(கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு) தங்கியிருந்த இலங்கை வீரர்களில் குஷால் மெண்டிஸ், தன்சுகா குணதிலகா, நிரோஷன் டிக்வெலா ஆகிய மூவரும் பயோ-பபுள் சூழலை மீறி ஹோட்டலை விட்டு வெளியேறினர்.
இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், பயோ-பபுள் சூழலை மீறியதாக கூறி, இலங்கை வாரியம் 3 வீரர்களுக்கும் ஓர் ஆண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட தடையும், அதே போன்று 6 மாதங்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட தடையும் விதித்தது.
இந்நிலையில், தற்போது தடை செய்யப்பட்டுள்ள இந்த மூன்று வீரர்களில் இரண்டு பேர் அமெரிக்காவிற்கு சென்று தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் துவங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம், ஒரு வீரர் இலங்கையை விட்டு வெளியேற முடிவு செய்திருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவருடன் மற்றொரு வீரரும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல ஊடகமான சண்டே மார்னிங் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த இரண்டு வீரர்களும் மூன்று ஆண்டுகளுக்கு அமெரிக்க கிரிக்கெட்டில் பங்கேற திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக அவர்களுக்கு ஆண்டிற்கு 125,000 டொலர் சம்பளம் (இலங்கை மதிப்பில் 2,49,70,425 கோடி ரூபாய்) கொடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
You May Like This Video