உறைந்த ஏரியில் கோர விபத்து: மூன்று பிரித்தானிய சிறுவர்கள் பலி! தொடரும் மீட்பு பணி
பிரித்தானியாவின் சோலிஹல் பகுதியில் உள்ள உறைந்த ஏரியில் இருந்து தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்ட சிறுவர்களில் மூன்று பேர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உறைந்த ஏரியில் தவறி விழுந்த சிறுவர்கள்
பிரித்தானியாவில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு-க்கு மத்தியில், சோலிஹல் பகுதியில் உள்ள உறைந்து போன Babbs Mill ஏரியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 6 சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென உறைந்து இருந்த ஏரிக்குள் விளையாடி கொண்டு இருந்த சிறுவர்கள் தவறி விழுந்துள்ளனர்.
West Mids Fire Service said that by the time fire crews had arrived on the scene, police officers were in the water trying to reach the children. One officer suffered hypothermia and was taken to hospital. Clearly, those blue lives know that all lives matter. #Team999 #Solihull pic.twitter.com/FNgZwbthI6
— Inspector Gadget (@InspGadgetBlogs) December 12, 2022
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சிறுவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கினர்.
விபத்து பகுதியில் பொலிஸார் மற்றும் மீட்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் நான்கு சிறுவர்கள் வரை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட நிலையில், இருவர் ஹார்ட்லேண்ட்ஸ் மருத்துவமனையிலும், இருவர் பேர்மிங்காம் குழந்தைகள் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு
ஏரியில் இருந்து மீட்கப்பட்ட நால்வரும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் 8, 10 மற்றும் 11 வயதுடைய மூன்று சிறுவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Three boys aged eight, 10 and 11 who were rescued yesterday after falling into an icy lake in Babbs Mill Park near Solihull have died - a fourth boy aged 6yrs remains in hospital in a critical condition. Photo: Birmingham Live pic.twitter.com/eg7D7Ld2tR
— Mark Williams-Thomas (@mwilliamsthomas) December 12, 2022
மேலும் 6 வயதுடைய நான்காவது சிறுவன் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏரியில் இருந்து நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்ட நிலையில், 6 சிறுவர்கள் வரை ஏரியில் விழுந்ததாக வெளியான உறுதிப்படுத்தப்படாத அறிக்கையின் அடிப்படையில், மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
ஆனால் இது “இனி ஒரு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையாக இருக்காது” என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அத்துடன் விபத்து ஏற்பட்டுள்ள பகுதியில் இருந்து பொதுமக்கள் விலகி இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.