இருமல் மருந்து குடித்த 3 குழந்தைகளுக்கு ஏற்பட்ட சோகம்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்
இந்தியாவில் இருமல் மருந்தை குடித்த 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள மோஹல்லா ஆஸ்பத்திரியில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்த 3 குழந்தைகள் உயிரிழந்தனர்.
இதுகுறித்து மத்திய அரசின் கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனை கூறியதாவது, கடந்த ஜூன் 29 முதல் நவம்பர் 21ஆம் திகதி வரை மட்டும் இருமல் மருந்தின் நச்சு காரணமாக 16 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.
அதுமட்டும் இல்லாமல் இறந்த குழ்நதைகள் அனைவரும் 1 முதல் 6 வயதை சேர்ந்தவர்கள் ஆவர். டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன் மருந்து பெரும்பாலும் இருமலை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த மருந்தை அதிக அளவில் உட்கொண்டால் தூக்கமின்மை, மயக்கம், வாந்தி, மூச்சு திணறல், வயிற்றுபோக்கு போன்றவை ஏற்படும். ஏற்கனவே மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பாக 4 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இந்த மருந்தை பரிந்துரைக்க வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
இதையடுத்து அந்த மருத்துவமனையை சேர்ந்த 3 மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி அரசு 4 நபர்கள் அடங்கிய விசாரணை குழு ஒன்றை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றது.