பூமிக்கு திரும்பிய 3 சீன விண்வெளி வீரர்கள்: ஷென்சோ-21 விண்வெளி பயணம் வெற்றி
விண்வெளி பயணத்தை முடித்துவிட்டு 3 சீன விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பியுள்ளனர்.
பூமிக்கு திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்
சீனாவின் விண்வெளி ஆய்வுத் திட்டமான ஷென்சோ 21(Shenzhou-21) விண்வெளி பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இந்த விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து 3 விண்வெளி வீரர்கள் மங்கோலியாவின் டோங்ஃபெங்(Dongfeng) தரையிறங்கும் தளத்தில் வந்திறங்கினர்.
ஷென்சோ 22 விண்கலம் மூலம் ஜாங் லு, வூ ஃபெப் மற்றும் ஜாங் ஹோங்ஜாங் ஆகிய 3 சீன விண்வெளி வீரர்களும் வெற்றிகரமாக பூமியில் தரையிறங்கினர்.

மேலும் விண்வெளி நிலையத்தின் பொறுப்புகளை ஷென்சோ 23 குழுவினரிடம் ஒப்படைக்கும் பணியும் தடையின்றி நிறைவடைந்துள்ளது.
ஷென்சோ 21 விண்வெளி ஆய்வுத் திட்டத்தின் மூலம், சீனாவின் விண்வெளி ஆராய்ச்சியில் நீண்ட காலம் விண்வெளியில் தங்கி ஆய்வு செய்த பயணமாக இது மாறியுள்ளது,
விண்வெளி நிலையத்தில் இவர்கள் பல சிக்கலான விண்வெளி ஆராய்ச்சிகளையும், அறிவியல் சோதனைகளையும் இந்த விண்வெளி வீரர்கள் மேற்கொண்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |