ரஷ்யாவின் எரிசக்தி நிலையங்களை குறிவைத்த உக்ரைன்: ஜெலென்ஸ்கி கொடுத்த உத்தரவு
ரஷ்யாவின் எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷ்யா மீது தாக்குதல்
வெள்ளிக்கிழமை ரஷ்ய எல்லைக்குள் அமைந்துள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீது உக்ரைனிய பாதுகாப்பு படையினர் தாக்குதல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உத்தரவின் பேரில் நடத்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள எரிசக்தி வையங்களை குறிவைத்து தாக்கி ரஷ்யாவின் பொருளாதார வலிமையை குறைக்க உக்ரைன் இந்த தாக்குதலை முன்னெடுத்ததாக கூறப்படுகிறது.
டெலிகிராமில் SBU வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் ரஷ்யாவின் எரிசக்தி விநியோகச் சங்கிலியில் உள்ள 2 முக்கியமான நிலையங்களான, யரோஸ்லாவ்-3(Yaroslavi-3) எண்ணெய் உந்தி நிலையம் மற்றும் டெம்ரியுக்(Temryuk) எரிவாயு முனையம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலின் எரிசக்தி நிலையங்களில் உள்ள உள்கட்டமைப்புகள் இடிக்கப்பட்டதுடன், எரிவாயு குழாய்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |