பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு: மூவர் பலி
Three dead, eight injured in Philippines school shooting: பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் மூன்று பேர் பலியாகியுள்ளார்கள், எட்டு பேர் காயமடைந்துள்ளார்கள்.
இன்று வெள்ளிக்கிழமை மதியம், பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள Banga என்னுமிடத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் இந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நண்பர்களை வீட்டுக்கு போகச் சொன்ன மாணவர்
மதிய உணவு இடைவேளையின்போது, மாணவர் ஒருவர் தன் நண்பர்களிடம் வீட்டுக்குப் போகுமாறு கூறியுள்ளார்.

ஏனென்றால், தான் உணவு இடைவேளைக்குப் பிறகு துப்பாக்கிச்சூடு நடத்த இருப்பதாக அந்த 16 வயது மாணவர் கூறியுள்ளார்.
அவர் எப்போதும் வேடிக்கையாக பேசுபவர் என்பதால், அவர் கூறியதை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லையாம்.
ஆனால், சொன்னதுபோலவே, உணவு இடைவேளைக்குப் பிறகு துப்பாக்கியால் மாணவர்களைத் தாக்கத் துவங்கியுள்ளார் அவர்.
மொத்தம் 10 மாணவர்கள் தாக்கப்பட்ட நிலையில், 14 வயதுடைய இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளார்கள், எட்டு பேர் காயமடைந்துள்ளார்கள். அவர்களில் நான்கு பேருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
சக மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த மாணவர், பின் தன்னைத்தான் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழக்க, உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
ஜூன் மாதம் பள்ளி ஒன்றில் மாணவர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தைத் தொடர்ந்து, இது பிலிப்பைன்ஸ் நாட்டில் நடக்கும் மூன்றாவது துப்பாக்கிச்சூடு சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.