பெங்களூருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகொலை: மூத்த மகளுக்கு பொலிஸார் வலைவீச்சு
பெங்களூருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
திங்கட்கிழமை பெங்களூருவின் சீகஹள்ளி(Seegehalli) பகுதியில் உள்ள சாய் கிரீன் குடியிருப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் தந்தை சோமசுந்தர் (55), அவரது மனைவி முத்துலெட்சுமி(48), மற்றும் இளைய மகள் சுப்ரியா(20) ஆகியோர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் சோமசுந்தர்-முத்துலட்சுமி தம்பதியினரின் மூத்த மகள் சுவேதா மற்றும் அவருடன் வசித்து வரும் கென்னத் ஆகிய இருவரையும் கே.ஆர் புரம் பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சுவேதா மற்றும் கென்னத் இருவரும் தற்போது தலைமறைவாக உள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கொலைக்கான பின்னணி காரணம்
முதல்கட்ட விசாரணையின் போது, நிதி நெருக்கடி மற்றும் குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சுவேதாவின் காதலை அவரது பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், சுவேதாவிற்கு 30 லட்சம் வரை கடன் சுமை இருப்பதாகவும் இதனால் குடும்பத்திற்குள் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |