வெளிநாட்டில் மலையேற்றத்துக்குச் சென்ற மூன்று ஜேர்மானியர்கள் பலி
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், ஆஸ்திரியா நாட்டில் மலையேற்றத்துக்குச் சென்ற மூன்று ஜேர்மானியர்கள் மலையிலிருந்து விழுந்து பலியாகியுள்ளார்கள்.
மூன்று ஜேர்மானியர்கள் பலி
சனிக்கிழமை மதியம், 59 வயதுடைய ஜேர்மானியர் ஒருவரும் அவரது மனைவியும் ஆஸ்திரியாவிலுள்ள Wagendrischelhorn என்னும் மலையில் ஏறிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
2,100 மீற்றர் உயரத்தில் ஏறிக்கொண்டிருக்கும்போது, 50 உயர்த்திலிருந்து ஒரு பள்ளத்தில் விழுந்துள்ளார் அந்த நபர்.
30 மீற்றர் தொலைவில் அவருக்கு பின்னால் வந்துகொண்டிருந்த அவரது மனைவி உடனடியாக அவசர உதவியை அழைத்துள்ளார்.
ஆனால், அவர்கள் வரும் முன்பே பள்ள்த்தில் விழுந்தவரின் உயிர் பிரிந்துள்ளது.
அதேபோல, அதே நாளில் Tyrol என்னுமிடத்தில் மலையேறிக்கொண்டிருந்த 58 வயது ஜேர்மானியர் ஒருவர் Hohe Geige என்னும் மலையில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன், Zimbajoch என்னுமிடத்தில் தன் நான்கு நண்பர்களுடன் மலையேற்றத்துக்குச் சென்றிருந்த 54 வயது ஜேர்மானியர் ஒருவரும் சுமார் 80 முதல் 100 மீற்றர் பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். அவரும் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |