போப் பிரான்சிஸிற்கு மூன்று மணிநேர அறுவை சிகிச்சை: மருத்துவர்கள் கூறிய அறிவுரை
இத்தாலியில் உடல்நல பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸிற்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவமனையில் அனுமதி
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, ரோமில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், போப்பிற்கு குடல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். அதன்படி 86 வயதான போப் பிரான்சிஸிற்கு மூன்று மணிநேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
AP
ஓய்வு தேவை
அதனைத் தொடர்ந்து வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், போப் குணமடைந்த பின்னர் அவரது பயணங்கள் மற்றும் பிற நடவடிக்கைகளில் எந்த வரம்பும் இருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளனர்.
முன்னதாக, கடந்த சில நாட்களாக ஹெர்னியா பாதிப்பால் போப் அவதிப்பட்டு வந்ததாக வாடிகன் தேவாலயம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
Thomson Reuters