நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டிய எம்.பி! இத்தாலிக்கு வரலாற்று நிகழ்வு
இத்தாலியில் முதல்முறையாக எம்.பி. ஒருவர் தனது குழந்தைக்கு நாடாளுமன்ற அவையிலே தாய்ப்பாலூட்டியை சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நாடாளுமன்றத்தில் தாய்ப்பால் ஊட்டிய முதல் அரசியல்வாதி
இத்தாலி நாடாளுமன்ற உறுப்பினர் கில்டா ஸ்போர்டியெல்லோ (Gilda Sportiello) அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தாய்ப்பால் ஊட்டிய முதல் அரசியல்வாதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ஜனரஞ்சகமான மூவிமென்டோ 5 ஸ்டெல்லின் உறுப்பினரான ஸ்போர்டியெல்லோ, புதன்கிழமை கீழ் சபையில் பொது நிர்வாக வாக்கெடுப்பின் போது, தன்னுடைய இரண்டு மாத மகன் ஃபெடரிகோவுக்கு (Federico) நாடாளுமன்றத்தின் உயர் பெஞ்சில் தாய்ப்பாலூட்டினார்.
Twitter@myrtamerlino
வாழ்த்தும் வரவேற்பும்
இந்த நிகழ்வு பல நாடுகளில் மிகவும் பொதுவானதாக இருக்கும், ஆனால் பாரம்பரியமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இத்தாலியில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்கெடுப்ப்பிற்கு மத்தியில் இந்த சம்பவம் அங்கு ஒருமனதாக கைதட்டலுடன் வரவேற்கப்பட்டது. பாராளுமன்றத்தின் துணைத் தலைவர் ஜியோர்ஜியோ முலே ஸ்போர்டியெல்லோவை வாழ்த்தினார்.
Twitter@iacopo_melio
agenzianova
Da oggi nell’Aula di @Montecitorio abbiamo trovato il modo di lavorare in silenzio. Infatti, grazie all’accordo unanime di tutti i gruppi parlamentari, il piccolo Federico, figlio della collega Sportiello potrà stare qui con la sua mamma. Auguri di una lunga, libera e serena vita pic.twitter.com/WaJY9RqsCI
— Giorgio Mulè (@giorgiomule) June 7, 2023
2021-ல் பலாஸ்ஸோ மான்டெசிடோரியோவில் உள்ள நாடாளுமன்ற கட்டிடங்களில் தாய்ப்பால் கொடுக்கும் அறை திறக்கப்பட்டது தான் இந்த வரலாற்று நிகழ்வுக்கான முதல் படி என கூறப்படுகிறது.
இத்தாலியின் தற்போதைய பிரதமரான ஜியோர்ஜியா மெலோனி (Giorgia Meloni) 2019-ஆம் ஆண்டு முன்மொழிந்ததைத் தொடர்ந்து, கடந்த நவம்பரில் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க அனுமதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
Italian MP Gilda Sportiello, Breastfeeding, Parliament,