பிரித்தானிய குடியிருப்பு பகுதியில் பயங்கர வெடிப்பு விபத்து: 3 பேர் பலி, மீட்பு பணி தீவிரம்
பிரித்தானியாவின் ஜெர்சி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட வெடிப்பு விபத்தில் 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான வாயு கசிவு
பிரித்தானியாவின் ஜெர்சி பகுதியில் உள்ள செயிண்ட் ஹெலியர் தீவுகள் துறைமுகத்தில் அதிகாலை 4:00 மணியளவில் சந்தேகத்திற்கிடமான வாயு கசிவு ஏற்பட்டதை அடுத்து அந்த பகுதியில் மிகப்பெரிய வெடிப்பு விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் மூன்று பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில், பலரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வெடிப்பு விபத்து தொடர்பாக வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகளில், ஜெர்சி பகுதியில் உள்ள மூன்று தாழ்வான அடுக்குமாடி குடியிருப்பில் தீ மற்றும் கரும்புகை வெளியேறுவது பார்க்க முடிகிறது.
WATCH: #BNNUK Reports.
— Gurbaksh Singh Chahal (@gchahal) December 10, 2022
After reports emerged of an explosion in the early hours of Saturday, a large area in St Helier has been cordoned off.#Jersey #explosion #UK #Accident pic.twitter.com/35rfgR2LcH
இது தொடர்பாக பொலிஸார் தெரிவித்த தகவலில், தீ தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது, இருப்பினும் நாட்டின் அவசர சேவைகள் அந்த பகுதியில் தேவையான மீட்பு பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது.
அத்துடன் தீ பற்றிய மூன்று கட்டிடங்கள் முற்றிலும் சிதைந்துள்ள நிலையில், அருகில் உள்ள சில கட்டிடங்களையும் இந்த வெடிப்பு விபத்து பாதித்துள்ளது, இதனால் மீட்பு பணிகள் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று ஜெர்சியின் தலைமை காவலர் ராபின் ஸ்மித் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மூன்று பேர் உயிரிழப்பு
முதலமைச்சர் கிறிஸ்டினா மூர் வழங்கியுள்ள தகவலில், தீ வெடிப்பு விபத்தில் மூன்று பேர் வரை உயிரிழந்துள்ளனர், மேலும் காணாமல் போன சிலரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.
Jersey Fire Explosion- ஜெர்சி தீ வெடிப்பு(twitter)
அண்டை குடியிருப்பாளர் அந்தோணி அபோட் விபத்து குறித்து பிபிசிக்கு அளித்த விளக்கத்தில், தீ விபத்து ஏற்பட்ட போது தீ வெடிப்பு ஜன்னல் கண்ணாடிகளை உள்ளாற தாக்கியது, எங்கள் குடியிருப்பை சுற்றி எங்கும் தீ பற்றி எரிந்தது, இதனால் சில நிமிடங்கள் உறைந்து போனேன். ஆனால் நல்லவேளையாக எங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை என தெரிவித்துள்ளார்.
ஜெர்சி பகுதியில் எரிவாயு விநியோகஸ்தரான Island Energy நிறுவனம், தீயணைப்பு படையினருடன் இணைந்து விபத்து குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.