ஐக்கிய அமீரகத்தில் இருந்து கப்பல் சேவையை அடுத்து இந்தியாவுக்கு ரயில் போக்குவரத்து: 3 முக்கிய திட்டங்கள்
ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியிருக்கும் மக்களின் பயண திட்டங்களை எளிதாக்கவும், கட்டணங்களில் ஒப்பீட்டளவில் மலிவாகவும் அளிக்க மூன்று முக்கிய திட்டங்கள் மிக விரைவில் அமுலுக்கு கொண்டுவரப்பட இருக்கிறது.
இந்தியாவுக்கு ரயில் சேவை
சமீபத்தில் டெல்லியில் நடந்து முடிந்த G20 மாநாட்டில் தெற்கு ஆசியாவையும் மத்திய கிழக்கு நாடுகளையும் இணைக்கும் புதிய திட்டமொன்றை முன்மொழிந்துள்ளனர். அதில், துறைமுகங்கள் மட்டுமின்றி ரயில் சேவை ஊடாகவும் இணைக்கப்பட உள்ளது.
Credit: KT
இந்த ரயில் சேவையை பொருட்களை கொண்டு செல்வதுடன், பயணிகள் பயன்பாட்டிற்கும் அனுமதிக்க உள்ளனர். இந்த ரயில் சேவையானது சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா மற்றும் அமெரிக்காவை இணைக்க உள்ளது.
இந்த புதிய திட்டமூடாக துறைமுகங்கள் மட்டுமின்றி, ரயில் சேவைகள், தரம் வாய்ந்த சாலைகள், மற்றும் மின்சாரம், எரிவாயு அத்துடன் ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க்கும் உட்படுத்தப்பட்டுள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் போக்குவரத்து
இந்த திட்டத்தின் ஒருபகுதியாக சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவுக்கு கப்பல் போக்குவரத்தும் கொண்டுவரப்பட வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர். அத்துடன், சவுதி அரேபியாவில் இருந்து ஐக்கிய அமீரகத்திற்கு ரயில் சேவை. பின்னர், துருக்கி நோக்கி கப்பல் சேவையும் அங்கிருந்து ஐரோப்பாவை இணைக்கவும் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
Credit: KT
இரண்டாவதாக, 6 வளைகுடா நாடுகளையும் இணைக்கும் ரயில் சேவை திட்டம் இதில் தற்போது அனைத்து சாத்தியக்கூறும் போக்குவரத்து ஆய்வுகளும் முடிக்கப்பட்டுள்ளன.
மூன்றாவதாக ஐக்கிய அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு கப்பல் சேவை. இந்தியாவின் தெற்கு மாகாணமான கேரளாவுக்கு கப்பல் போக்குவரத்தானது மிக விரைவில் தொடங்க உள்ளது. பெரும்பாலான இந்திய மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துவார்கள் என்றே நம்பப்படுகிறது. கட்டணமாக Dh442 வசூலிக்க உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |