லண்டனின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்: ஆண், பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு
லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் பரபரப்பு
தெற்கு லண்டனின் எலிபெண்ட் ஆண்ட் கேஸ்டில்(Elephant and Castle) பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கீழே விழுந்து உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமை காலை ஏற்பட்ட இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் குழந்தை என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தைத் தொடர்ந்து மீட்பு படையினர், காவல்துறையினர் மற்றும் ஏர் ஆம்புலன்ஸ் ஆகியவை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தாலும்(காலை 7.29 மணி) கீழே விழுந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை பொலிஸார் எதிர்பாராத தற்செயல் நிகழ்வாக கருதி விசாரித்து வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதையும் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து ஆதரவு அளிக்கும் அதிகாரிகளை லண்டன் காவல்துறை நியமித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |