புறப்படுவதற்கு முன் விமானத்தை ஆய்வு செய்த 3 விமானிகள் பரிதாப பலி! என்ன நடந்தது? அரசாங்கம் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்
ரஷ்யாவில் புறப்படுவதற்கு முன் போர் விமானத்தை ஆய்வு செய்யும் போது ஏற்பட்ட விபத்தில் 3 விமானிகள் பரிதாபமாக உயரிழந்துள்ளனர்.
மேற்கு-ரஷ்ய நகரமான கலுகாவிலே இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியான சிறிது நேரத்திலேயே ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் சம்பவத்தை உறுதிப்படுத்தியது.
புறப்படுவதற்கு முன் Tu-22M3 போர் விமானத்தை விமானிகள் ஆய்வு செய்துக்கொண்டிருந்த போது, எதர்ச்சையாக விமானத்திலிருந்து வெளியேறும் அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், இருக்கையுடன் விமானிகள் மேல் நோக்கி பறந்தள்ளனர், குறைவான உயரம் என்பதால் பாராசூட் வேலை செய்யாமல் போயுள்ளது.
தரையில் விழுந்த 3 விமானிகளும் படுகாயமடைந்து உயிரிழந்தள்ளனர்.
இதில் விமானத்திற்கு எந்த சேதமும் எற்படவில்லை என தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சகம், விபத்து குறித்த மேலதிக தகவல்கள் ஏதும் வெளியிடவில்லை.