நொடிப்பொழுதில் நடந்த கோர விபத்து! இலங்கை தமிழர்கள் மூவர் பலியான பரிதாபம்
சென்னையில் மூன்று இலங்கை தமிழர்கள் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது, லொறி மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ எடுத்த இளைஞர்கள்
சென்னை திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, மூன்று இலங்கை தமிழர்கள் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாமில் தயாளன், சார்லஸ், ஜான் ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.
@getty images
இந்நிலையில் இவர்கள் மூன்று பேரும் நேற்று பெத்திக்குப்பத்தில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
அப்போது பைக்கை வேகமாக செலுத்திக் கொண்டு, போனில் வீடியோ எடுத்தபடி சென்றுள்ளனர்.
மூன்று பேர் பலி
ஒரு கட்டத்தில் அவர்கள் தங்களுக்கு முன் சென்ற லொறியை முந்தி செல்ல முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில், 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், இளைஞர்களின் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர் பொலிஸார் நடத்திய விசாரணையில், இறந்த இளைஞர்களான தயாளன்(19), சார்லஸ் (21), ஜான் (20) ஆகியோர், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து லோறி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற மோகத்தால், ஆபத்தான பயணத்தில் வீடியோ எடுப்பதால் விபத்து ஏற்படுவது தொடர் கதையாகியுள்ளது.
@getty images