ரயில் மீது வெடிபொருள் வாகனத்தை மோதி பயங்கரவாத தாக்குதல்: 30 பேர் பலி..பாகிஸ்தானில் பதற்றம்
பாகிஸ்தானில் ரயில் மீது வெடி பொருட்களுடன் வாகனத்தை மோத செய்த தாக்குதலில் 30 பேர் பலியாகினர் என தகவல் வெளியாகியுள்ளது.
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம்
பாகிஸ்தானின் தென்மேற்கு நகரமான குவெட்டா வழியாக பயணிகள் ரயில் சென்றுகொண்டிருந்தது.
அப்போது ரயில் தண்டவாளத்திற்கு அருகே வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று மோதியுள்ளது.
இதில் ரயிலின் இரண்டு பெட்டிகள் கவிழ்ந்து தீப்பிடித்தன. இச்சம்பவத்தில் ரயிலில் பயணித்தவர்களில் 30 பேர் பலியாகினர் என்று கூறப்படுகிறது.
கவலைக்கிடமான நிலையில் 50க்கும் மேற்பட்டோர்
மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கமாக பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்பட்டிருக்கும் பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இதனால் அருகிலுள்ள பல கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன மற்றும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் நொறுங்கின என்று நேரில் பார்த்தவர்களும் சமூக ஊடகங்களில் பரவி வரும் படங்களும் தெரிவிக்கின்றன.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |