எகிப்தில் 3000 ஆண்டுகள் பழமையான கடவுளை போன்ற புதிய கல்லறை கண்டுபிடிப்பு! ஆச்சரியமூட்டும் தகவல்கள்
எகிப்து நாட்டில் 3000 ஆண்டுகளுக்கு பழமையான ”யோயோ” என்ற கடவுளைப் போன்ற கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பழமையான கல்லறை
டச்சு-இத்தாலிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், எகிப்தின் கிசாவிலுள்ள ஒரு தளத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, பன்ஹேசி என்ற மனிதனின் கல்லறையை கண்டுபிடித்துள்ளனர்.
@Egyptian Ministry of Tourism
மேலும் அது 3,000 ஆண்டுகளுக்கு முன்பு ரமேசைட்(Ramesside) காலத்தை சேர்ந்த கல்லறை என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இது பண்டைய கிராமமான சக்காராவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதில் எகிப்திய அரச குடும்பத்தின் பண்டைய புதைகுழிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
@Egyptian Ministry of Tourism
3,063 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி சுமார் 1,993 ஆண்டுகளுக்கு முன்பு முடிவடைந்த ரமேஸ்சைட் காலத்தில், பன்ஹேசி(Banhesi) வாழ்ந்ததாக நிபுணர்கள் நம்புகின்றனர்.
இறந்த ஆத்மாக்களுக்கு உதவும் கடவுள்
கல்லறையின் உள்ளே காணப்படும் சிலைகள் ஹதோர் தெய்வத்தை வணங்குவதைக் காட்டுகிறது. இது உலகங்களுக்கிடையில் பயணம் செய்த கடவுள்கள் என எகிப்தியர்கள் நம்புகின்றனர்.
@Egyptian Ministry of Tourism
இந்த கடவுள் இறந்த ஆன்மாக்கள் மரணத்திற்குப் பிறகான வாழ்க்கையில் நுழைய உதவுவதாக எகிப்திய மரபு கூறுகிறது. எகிப்திய மன்னரான பன்ஹேசி மற்றும் அவரது மனைவி பாயா, சிறுத்தை தோலை அணிந்த ஒரு மனிதருக்கு அருகில் நிற்பதைக் காட்டும் காட்சியும் கல்லறையில் இடம்பெற்றுள்ளது.
"டச்சு-இத்தாலிய தொல்பொருள் ஆய்வுக் குழுவினர், ரமேஸ்சைட் ஆட்சியாளர்களின் காலத்தைச் சேர்ந்த பன்ஹேசி என்ற நபரின் கல்லறையை, அதன் தற்போதைய பருவத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடித்துள்ளனர்” என எகிப்தின் சுற்றுலா மற்றும் தொல்பொருட்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
@Egyptian Ministry of Tourism
இந்த கல்லறை ரமேஸ்சைட் காலத்தை பற்றி முன்னர் அறியப்படாத புதிய வரலாற்றுத் தகவலை வெளிக்கொணரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டச்சு மற்றும் இத்தாலிய திட்டம் லைடனில் உள்ள தேசிய பழங்கால அருங்காட்சியகம் மற்றும் டுரினில் உள்ள எகிப்திய அருங்காட்சியகத்தால் நியமிக்கப்பட்டது.
தொல்பொருள் அமைச்சகத்தின் மேற்பார்வையின் கீழ் ஆராய்ச்சியாளர்கள் சக்காரா தொல்பொருள் பகுதியில் பணியாற்றியுள்ளனர்.