டபுள் டெக்கர் படகு மூழ்கியதில் 25 பேர் பலி! வங்கதேசத்தில் கோர சம்பவம்: பலர் காணவில்லை என தகவல்
வங்க தேசத்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிவந்த படகு மூழ்கியதில் 32-க்கும் மேற்பட்டோர் நதியில் மூழ்கி பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அவசர குழுவினர் 32சடலங்களை மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பலரை காணவில்லை என்று அந்நாட்டின் தீயணைப்பு மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரி Ershad Hossain தெரிவித்தார்.
மத்திய வங்க தேசத்ததில் தலைநகர் டாக்காவுக்கு அருகிலுள்ள Shitalakhsya நதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சரக்கு கப்பல் மீது மோதியதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிவந்த சிறிய டபுள் டெக்கர் படகு மூழ்கியது.
உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில், படகு Narayanganj நகரத்திலிருந்து அண்டை மாவட்டமான Munshiganj மாவட்டத்திற்கு 45 நிமிட பயணத்தில் புறப்பட்ட சற்று நேரத்தில் இந்த விபத்து நடந்தது.
அதிகரித்து வரும் COVID-19 தொற்றுகளை கட்டுப்படுத்தும் முயற்சியில், அந்நாட்டில் திங்கள்கிழமை முதல் ஏழு நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கை அரசாங்கம் அறிவித்தது.
அந்த ஏழு நாள் பூட்டுதலின் போது, விமானங்கள் உட்பட அனைத்து உள்நாட்டு பயண சேவைகளும் நிறுத்தப்படும், மேலும் மால்கள் மற்றும் கடைகள் மூடப்படும் என உறுதிப்படுத்தியதை அடுத்து, சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் விரைந்த நிலையில், நேற்று அனைத்து படகுககளும் பயணிகளால் நிரம்பி வழிந்தன. விபத்துக்குள்ளான படகில் அளவுக்கு மீறி பயணிகளை ஏற்றியதால் இந்த விபத்து நடத்திருக்கலாமா என கூறப்படுகிறது.
விபத்தை தொடர்ந்து 5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். அதேபோல் இன்று பிற்பகலுக்குள் மேலும் 20 சடலங்கள் மீட்கப்பட்டன.
8 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இன்னும் பலரை தேடிவருவதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.



