Bank Account -ல் தவறுதலாக Credit ஆன ரூ.32 லட்சம்.., மோசடி கும்பலால் அவதிப்படும் கூலித்தொழிலாளி
கூலித் தொழிலாளியின் வங்கிக் கணக்கில் ரூ.32 லட்சம் தவறுதலாக Deposit செய்யப்பட்டதால் வங்கி கணக்கு முடக்கப்பட்டது.
தவறுதலாக Credit
சென்னையை அடுத்துள்ள எண்ணூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மதியழகன். இவர், Central Bank of India வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார்.
இவர், தனது மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக பணம் எடுப்பதற்காக வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது அவர், ரூ.40 ஆயிரம் பணம் எடுப்பதற்காக படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துள்ளார்.
ஆனால், மதியழகனின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட மதியழகன் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள், "உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒன்லைன் மோசடி கும்பல் ஒன்று ரூ.32 லட்சத்தை வேறொரு வங்கிக் கணக்குக்கு அனுப்புவதற்காக பதிலாக உங்களது கணக்கிற்கு அனுப்பியுள்ளனர். இதனால், சேமிப்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.
இதனால், வங்கி மேலாளரிடம் மதியழகன் புகார் அளித்துள்ளார். மேலும் அதிகாரிகள் கூறுகையில், "உத்தரகண்ட் மாநில சைபர் கிரைம் பொலிஸார் மதியழகனின் வங்கிக் கணக்கை முடக்குமாறு தெரிவித்தனர்.
இதனால் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்ததும் மீண்டும் வங்கிக் கணக்கு செயல்பாட்டுக்கு வரும்" என்று கூறினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |