மொத்தம் 321 டாங்கிகள்…உக்ரைனுக்கு வாரி வழங்க தயாரான முக்கிய மேற்கத்திய நாடுகள்
ரஷ்யா எதிரான போர் நடவடிக்கையில் மொத்தம் 321 டாங்கிகள் உக்ரைனுக்கு வழங்க உறுதியளிக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய நாடுகள் உறுதி
ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் நடவடிக்கையில், ரஷ்யாவின் தாக்குதல்களை சமாளித்து எதிர் தாக்குதலை நடத்துவதற்கு உதவியாக பல்வேறு மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு இராணுவ ஆயுதங்கள் மற்றும் தடுப்பு கருவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இடையே சமீபத்திய பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, சேலஞ்சர் 2 டாங்கிகள் மற்றும் கூடுதல் பீரங்கி அமைப்புகள் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
AP
இதன்மூலம் உக்ரைனுக்கு பிரித்தானியா 14 சேலஞ்சர் டாங்கிகள் மற்றும் பீரங்கி துப்பாக்கிகள் அனுப்பும் என்பது உறுதியாகியுள்ளது.
அத்துடன் பிரித்தானியாவின் இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் போலந்து போன்ற நாடுகளும் உக்ரைனுக்கு டாங்கிகள் அனுப்புவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
321 டாங்கிகள்
இந்நிலையில் உக்ரைனுக்கு பல நாடுகளால் மொத்தம் 321 கனரக டாங்கிகள் வழங்க உறுதியளிக்கப்பட்டு இருப்பதாக பிரான்சுக்கான உக்ரைன் தூதுவர் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
Omar Marques/Getty Images
பிரான்சின் BFM தொலைக்காட்சியில் தூதுவர் வாடிம் ஒமெல்சென்கோ பேசுகையில், "இன்றைய நிலவரப்படி, உக்ரைனுக்கு 321 கனரக தொட்டிகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பல நாடுகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன என தெரிவித்துள்ளார்.
அத்துடன் டெலிவரி விதிமுறைகள் ஒவ்வொரு பரிமாற்றத்திலும் மாறும் என்றும், இந்த உதவிகள் எங்களுக்கு மிக விரைவாக தேவை என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதில் எந்தெந்த நாடுகள் எத்தனை டாங்கிகளை வழங்குகின்றன என்ற எண்ணிக்கையை ஒமெல்சென்கோ வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.