ரயிலுடன் கடத்தப்பட்ட 346 பேர் மீட்பு: பயங்கர சண்டையில் 28 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் கடத்திய ரயிலில் சிக்கியிருந்த பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள்
பலுசிஸ்தான் மாகாணத்தில் பெஷாவர் பகுதிக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் இணைந்து பயங்கரவாதிகளிடம் சிக்கிய பயணிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், ராணுவத்தைச் சேர்ந்த 28 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
346 பணயக்கைதிகள்
மேலும், ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த நடவடிக்கையின்போது 346 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்" என தெரிவித்தார்.
இதற்கிடையில், ரயில் கடத்தல் சம்பவத்திற்கு பலூச் விடுதலைப் படை உரிமை கோரியதுடன், டசன் கணக்கான துப்பாக்கி ஏந்தியவர்கள் மலைகளில் மறைந்திருந்த இடங்களில் இருந்து வெளியே வருவது போன்ற வீடியோவையும் வெளியிட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |