சீனாவில் 35 பேர் உயிரை விபத்தில் பறித்த 62 வயது நபர்: குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
சீனாவில் 35 பேரின் உயிரை பறித்த 62 வயது நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றம்
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 62 வயதான பென் வெய்கியு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜுஹாய் நகரில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் 35 பேர் பலியான சம்பவத்தில் குற்றவாளியாக கண்டறியப்பட்டு, அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், வெய்கியு தனது காரை ஜுஹாய் நகரில் உள்ள ஒரு மைதானம் அருகே ஓட்டிச் சென்றபோது, அங்கு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த ஏராளமான மக்கள் மீது கார் வேகமாக நுழைந்தது.
இந்த திடீர் விபத்தில் அதிர்ச்சியடைந்த மக்கள் அனைத்து திசைகளிலும் சிதறி ஓடினர். இருப்பினும், இந்த விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பென் வெய்கியுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்றம், இந்த வழக்கில் விரிவான விசாரணை மேற்கொண்டு, வெய்கியுவை குற்றவாளி எனத் தீர்ப்பளித்து மரண தண்டனை விதித்தது.
தற்போது, நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சீனாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |