300 அடி பள்ளத்தில் விழுந்த பேரூந்து - பலியானோருக்கு ரூ.2 லட்சம் வழங்க அதிரடி திட்டம்
ஜம்மு காஷ்மீரின் தோடாவில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் 36 பேர் உயிரிழந்தனர் மற்றும் 19 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பள்ளத்தில் விழுந்த பஸ்
கிஷ்த்வாரில் இருந்து ஜம்மு நோக்கிச் சென்ற பேருந்து படோட்-கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது.
துரதிர்ஷ்டவசமாக 36 பேர் இறந்துள்ளனர் மற்றும் 19 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் ஆறுபேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சிக்கயவர்களை மீட்டெடுப்பதற்காக பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The bus accident in Doda, Jammu and Kashmir is distressing. My condolences to the families who have lost their near and dear ones. I pray that the injured recover at the earliest.
— PMO India (@PMOIndia) November 15, 2023
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. Rs.…
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |