ரஷ்யாவை நோக்கி பாய்ந்த 379 உக்ரைனிய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்திய ரஷ்ய பாதுகாப்பு படை
ரஷ்யா மீது உக்ரைனிய படைகள் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்து இருப்பதாக ரஷ்ய படைகள் தெரிவித்துள்ளன.
ரஷ்யாவை நோக்கி பாய்ந்த 379 ட்ரோன்கள்
ரஷ்ய எல்லைக்கு உட்பட்ட மற்றும் ரஷ்யாவின் கடல் எல்லைகளை குறிவைத்து உக்ரைனிய படைகள் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.
நேற்று இரவிலிருந்து நடத்தப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதலில் குறைந்தது உக்ரைனின் 379 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இடை மறிக்கப்பட்ட ட்ரோன்கள் மாஸ்கோ, பெல்கோரோட், ஓரியோல், டவெர், பிஸ்கோவ், குர்ஸ்க், ரோஸ்டோவ், கிராஸ்னோடர். லெனின்கிராட் மற்றும் கிரீமியா ஆகிய பகுதியில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கருங்கடல் மற்றும் அசோவ் கடல் ஆகிய பகுதிகளை குறிவைத்தும் உக்ரைனிய ட்ரோன் தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலடியாக ரஷ்ய பாதுகாப்பு படையினரும் தங்களது வலுவான எதிர்வினையை காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |