பிறந்து 37 நாட்களில் கொரோனாவுக்கு பலியான பச்சிளம் குழந்தை; நாட்டையே துக்கத்தில் ஆழ்த்திய சம்பவம்
கிரீஸ் நாட்டில் பிறந்து 37 நாட்களே ஆன குழந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ள சம்பவம் அந்நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிரீஸ் நாட்டில் கிட்டத்தட்ட 6,800 பேர் கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர், கிட்டத்தட்ட 480 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில், அந்நாட்டிலேயே மிக இளம் பாதிப்பாளராக, பிறந்து 37 நாட்களே ஆன ஆண் குழந்தை கொரோனாவால் இறந்துள்ளது.
இது அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை 'தாங்க முடியாத துக்கம்' என அந்நாட்டு பிரதமர் Kyriakos Mitsotakis தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி நடுப்பகுதியில் நாசி வீக்கம் மற்றும் காய்ச்சலுடன் அந்த குழந்தை Athens குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பிறந்து 20 நாளில் குழந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது சோதனையில் தெரியவந்தது.
பின்னர் 17 நாட்கள் தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இறந்துவிட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.