அமெரிக்காவில் காட்டுத் தீ ஏற்பட்ட பகுதிகளில் 388 பேர் மாயம்! அதிர்ச்சிப் பட்டியல் வெளியீடு
அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் காட்டுத் தீ ஏற்பட்ட பகுதிகளில் மாயமானவர்களின் பட்டியலை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
115 பேர் பலி
கடந்த புதன்கிழமை அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் காட்டுத் தீ பரவியதில் 115 பேர் பலியாகினர்.
மேலும் 271 கட்டுமானங்கள், 19000 வீடுகள், கடைகள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் காணாமல் போனவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
Robert Ray
மாயமானவர்கள் பட்டியல்
இதில் மாவி தீவில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள லஹேனா, புலேஹு மற்றும் மத்திய பகுதிகளில் 388 பேர் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை மத்திய புலனாய்வு அமைப்பான எப்ஃபிஐ கூறியதாக தெரிவித்துள்ளது.
Mandel Ngan | AFP | Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |