பாகிஸ்தானில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
பாகிஸ்தானில் இன்று அதிகாலை 1:44 மணியளவில் ரிக்டர் அளவில் 4.0 அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
தேசிய நிலச்சலன மையத்தின் (NCS) தகவலின்படி, இந்த நிலநடுக்கம் பூமியின் 10 கிலோமீட்டர் ஆழத்தில் உருவாகியுள்ளது.
இதன் மையப்புள்ளி 29.67°N அகலவீச்சிலும், 66.10°E நீளவீச்சிலும் அமைந்துள்ளது.
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பாகிஸ்தானின் பல பகுதிகளில் உணரப்பட்டன. இதுவரை உயிரிழப்பு அல்லது பெரும் சேதம் குறித்து எந்தத் தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதற்கு முன்னரும் பாகிஸ்தான் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் அச்சத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான நிலைமை கடுமையாக மோசமாகியுள்ளது. வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் இந்திய நகரங்கள், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் சில இராணுவ நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
இந்தியாவும் இந்த தாக்குதல்களுக்கு "நியாயமான மற்றும் பொறுப்பான" பதிலடி கொடுத்துள்ளதாக அவர் கூறினார். பாகிஸ்தான் தவறான தகவல்களை பரப்பி, அமிர்தசரஸை இந்தியா தாக்கியது என பொய்யான பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், நன்கானா சாஹிப் குருத்வாரா மீது இந்தியா தாக்கியதாக பாகிஸ்தான் கூறியதாகவும், அது சமுதாயத்துக்குள் கலவரத்தை தூண்டும் ஒரு திட்டம் எனவும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Pakistan earthquake May 2025, 4.0 magnitude earthquake Pakistan, India Pakistan latest news 2025, earthquake today in Pakistan, Pak India border tensions, Vikram Misri statement Pakistan, Nankana Sahib attack allegation, Indo-Pak conflict update, National Centre for Seismology, Pakistan drone attacks India