சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து திடீரென புறப்பட்ட 4 விண்வெளி வீரர்கள்: பரபரப்பை உருவாக்கியுள்ள செய்தி
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து திடீரென நான்கு விண்வெளி வீரர்கள் புறப்பட்ட விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
திடீரென புறப்பட்ட நான்கு விண்வெளி வீரர்கள்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station - ISS) தங்கியிருந்த விண்வெளி வீரர்களில் நான்கு பேர், திடீரென பூமிக்குப் புறப்பட்டுள்ளனர்.

அமெரிக்க விண்வெளி வீரர்களான Zena Cardman (38), மற்றும் Mike Fincke (58), ஜப்பான் நாட்டவரான Kimiya Yui (55), ரஷ்ய நாட்டவரான Oleg Platonov (39) ஆகியோரே பூமிக்குத் திரும்பும் விண்வெளி வீரர்கள் ஆவர்.
LIVE: @zenanaut, @AstroIronMike, and their fellow Crew-11 members have said their goodbyes, and the SpaceX Dragon hatch is closed. Now, watch as they undock from the @Space_Station. https://t.co/FVnNDMIlrZ
— NASA (@NASA) January 14, 2026
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை விண்வெளியில் செலவிடும் திட்டத்துடன் கடந்த ஆண்டு ஆகத்து மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றிருந்த இந்த வீரர்கள், அவர்களில் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் திடீரென அவர்கள் பூமிக்கு புறப்பட நேர்ந்துள்ளது.

சம்பந்தப்பட்ட விண்வெளி வீரரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. என்றாலும், யாருக்கு பிரச்சினை, அவருக்கு என்ன பிரச்சினை என்பது போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |