புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளைஞர் தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு: 4 நாட்களுக்கு பிறகு தெரியவந்த பயங்கரம்
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தலையில் குண்டு பாய்ந்த இளைஞர் 4 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தலையில் பாய்ந்த குண்டு
தென் அமெரிக்காவின் பிரேசில் நாட்டில் உள்ள ஜெனிரோ கடற்கரையில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் தனது நண்பர்களுடன் 21 வயது இளைஞர் மேடியஸ் ஃபேசியோ(Mateus Facio) கலந்து கொண்டுள்ளார்.
அப்போது அவரது தலையில் ஏதோ தாக்கியது போல உணர்ந்துள்ளார், இதையடுத்து அவரது தலையில் இருந்து ரத்தம் கொட்டியுள்ளது.
ஆனால் சிறிது நேரத்தில் ரத்தம் நின்று விடவே, யாரோ தன் மீது கல் எறிந்து இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இணைந்துள்ளார்.
?BRASIL: Estudante baleado na cabeça em praia do RJ confunde tiro com pedrada e dirige mais de 300km de volta a MG.
— CHOQUEI (@choquei) January 20, 2024
Após uma viagem tranquila de 7 horas, Mateus Facio seguiu sua vida normalmente. No entanto, quatro dias depois, ele começou a sentir-se mal e decidiu procurar um… pic.twitter.com/cNP0O09We4
மேலும் புது வருடத்தை கொண்டாட சொந்த ஊரான மினாஸ் கெராய்ஸ் மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
சொந்த ஊருக்கு சென்ற 2 நாட்களுக்கு பிறகு மேடியஸ் ஃபேசியோவின் (Mateus Facio) வலது கை செயலிழக்க ஆரம்பித்துள்ளது.
நாட்கள் செல்ல செல்ல தீவிரம் அதிகரிக்கவே, 4 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் செய்யப்பட்ட பரிசோதனையில், அவரது தலைப் பகுதியில் 9 மிமீ துப்பாக்கி குண்டின் சிறிய பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாகவே அவரது வலது கை செயலிழக்க தொடங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை
2 மணி நேரம் தீவிரமாக நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு பிறகு, தலையில் இருந்த துப்பாக்கி குண்டை வெற்றிகரமாக மருத்துவர்கள் வெளியேற்றினர்.
மேலும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து மேடியஸ் ஃபேசியோ பேசிய போது, கல் தாக்கி இருக்கும் என்று தான் நினைத்தேன், அப்போது துப்பாக்கி சூடு சத்தம் எதுவும் கேட்கவில்லை, இப்படியொரு சம்பவம் என் வாழ்வில் நடைபெறும் கனவிலும் நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |