ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்ம மரணம்! ஹொட்டல் அறையில் கைப்பற்றப்பட்ட சடலங்கள்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், ஹொட்டல் அறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹொட்டலில் தங்கிய குடும்பம்
கர்நாடக மாநிலம் மங்களூரில் 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் ஹொட்டல் ஒன்றில் அறையெடுத்து தங்கியுள்ளனர்.
அவர்கள் அனைவரும் மரணமடைந்தது தெரிய வந்ததும், ஹொட்டல் ஊழியர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
@iStock
உடனடியாக அங்கு விரைந்த பொலிஸார் நான்கு பேரின் உடலையும் மீட்டனர். பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
குறிப்பைக் கைப்பற்றிய பொலிஸார்
மருத்துவமனைக்கு சடலங்களை அனுப்பி வைத்த பொலிஸார்,, குறிப்பு ஒன்றை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
@pixabay