துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 4 இந்தியர்கள் உட்பட 16 பேர் பலி
துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 இந்தியர்கள் உட்பட 16 பேர் பலியாகினர்.
4 இந்தியர்கள்
ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரமான துபாயில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர், 9 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 4 இந்தியர்களும் உள்ளடங்குவதாக செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அறிக்கைகளின்படி, சனிக்கிழமை மதியம் 12.35 மணியளவில் துபாயின் பழைய சுற்றுப்புறமான அல் ராஸில் உள்ள ஒரு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக துபாய் குடிமைத் தற்காப்பு நடவடிக்கை அறைக்கு முதலில் தெரிவிக்கப்பட்டது. கட்டிடத்தின் நான்காவது மாடியில் ஏற்பட்ட பாரிய தீ மற்ற பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது.
twitter@MTVEnglishNews
பின்னர், துபாய் குடிமைத் தற்காப்புத் தலைமையகத்தைச் சேர்ந்த ஒரு குழு தீ விபத்து நடந்த இடத்திற்கு வந்து கட்டிடத்தில் வசிப்பவர்களை வெளியேற்றத் தொடங்கியது. தவிர, போர்ட் சயீத் தீயணைப்பு நிலையம் மற்றும் ஹம்ரியா தீயணைப்பு நிலையத்தின் குழுக்களும் வரவழைக்கப்பட்டன. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:42 மணிக்கு தீ அணைக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கேரளா, தமிழநாட்டைச் சேர்ந்தவர்கள்
பாதிக்கப்பட்டவர்களில் கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி மற்றும் தமிழநாட்டைச் சேர்ந்த இரண்டு நபர்கள் அடங்கிய நான்கு இந்தியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், 3 பாகிஸ்தானிய உறவினர்கள் மற்றும் கட்டிடத்தில் பணிபுரிந்த ஒரு நைஜீரிய பெண் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
துபாய் காவல்துறை, துபாயில் உள்ள இந்திய துணை தூதரகம், பிற தூதரக அதிகாரிகள் மற்றும் இறந்தவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஒருங்கிணைத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
twitter@sebusher
விசாரணை
இதற்கிடையில், துபாய் குடிமைத் தற்காப்பு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கட்டிடம் போதுமான பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து விரிவான அறிக்கையை வழங்க அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் ஏழு அமீரகங்களில் ஒன்றான துபாயில் சுமார் 3.3 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் இந்தியர்கள் உட்பட 90 சதவீதம் பேர் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Image: Twitter/@realzaidzayn