ஹைட்டி அதிபர் படுகொலை: 4 கூலிப்படையினர் கொலை, இருவர் கைது!
கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹைட்டி நாட்டின் அதிபரை படுகொலை செய்த நான்கு கூலிப்படையினர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹைட்டி நாட்டின் அதிபர் ஜொவினஸ் மோஸ் (Jovenel Moise) புதன்கிழமையன்று திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார்.
ஹைட்டி நாட்டின் தலைநகரம் போர்ட்-ஓ-பிரின்ஸ் (Port-au-Prince) மேலே உள்ள மலைகளில் உள்ள அவரது வீட்டில் கமாண்டோக்கள் குழுவினரால், நள்ளிரவு 1 மணிக்கு படுகொலை செய்யப்பட்டதாக இடைக்கால் பிரதமர் அறிக்யைில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஹைட்டி முதல் பெண்மணி Martine Marie Etienne Joseph மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவத்தை தொடர்ந்து, தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் அதிகாரிகள் ஒரு நடவடிக்கையை (Operation) மேற்கொண்டு வருவதாக ஹைட்டியின் தேசிய காவல்துறை டைரக்டர் ஜெனரல் லியோன் சார்லஸ் (Leon Charles) தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையில் தற்போது, 4 கூலிப்படையினர் கொல்லப்பட்டதாகவும், 2 பேர் கைது செய்யப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறினார்.
மேலும், கூலிப்படையினர் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த 3 காவல்துறை அதிகாரிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளதாக லியோன் சார்லஸ் தொலைக்காட்சியில் அறிவித்தார்.