யாழ்ப்பாணத்தில் 4 மாத குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: பிரேத பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பு
இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்து 4 மாதங்களே ஆன குழந்தை ஒன்று உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4 மாத குழந்தை உயிரிழப்பு
இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்து 4 மாதங்கள் மட்டுமே ஆன குழந்தை ஒன்று நேற்று (24.5.2026) திகதி உயிரிழந்துள்ளது.
வரணி - இயற்றாலை பகுதியைச் சேர்ந்த தவகுமார் பஸ்மிலன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
23ம் திகதி குழந்தைக்கு சுவாசிப்பதில் ஏற்பட்ட சிரமத்தை தொடர்ந்து இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிரேத பரிசோதனை
சுவாசிப்பதில் ஏற்பட்ட சிரமத்தை தொடர்ந்து குழந்தை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த குழந்தை நேற்று (24.5.2026) அதிகாலை உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |