4 மாதங்களில் விடுதலை: சிறையிலிருந்து தப்பியோடியதால் மேலும் 40 ஆண்டுகளுக்கு தண்டனை
அமெரிக்காவில் விடுதலைக்கு 4 மாதங்களே இருக்கும் போது சிறையில் இருந்த தப்பித்த 21 வயது கைதிக்கு மேலும் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறையில் இருந்து தப்பித்த கைதி
அமெரிக்காவின் விடுதலைக்கு 4 மாதங்களே இருக்கும் போது 21 வயதுடைய கைதி ஒருவர் மிசிசிப்பி சீர்திருத்த வசதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
ஸ்கை நியூஸ் தகவலின்படி, கடந்த 2022 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷுனெக்ண்ட்ரிக் ஹஃப்மா(Shunekndrick Huffma) என்ற நபர் விடுதலைக்கு நான்கு மாதங்களே மீதம் இருக்கும் நிலையில், மிசிசிப்பி மத்திய சீர்திருத்த வசதியில் இருந்து தப்பியோடியுள்ளார்.
Mississippi Department of Corrections
அத்துடன் அவர் அருகில் உள்ள வீடு ஒன்றில் இருந்த 3 பேரை துப்பாக்கி முனையில் பிணை கைதிகளாக சிறிது நேரத்திற்கு வைத்து இருந்ததுடன், அவர்களில் ஒருவரிடம் இருந்த காரை திருடிக் கொண்டு சென்று விபத்து ஏற்படுத்தியுள்ளார்.
இதையடுத்து சிறை வளாகத்தில் இருந்து 3.2 கி.மீ தொலைவில் விட்ஃபீல்டில் உள்ள மிசிசிப்பி அரசு மருத்துவமனையின் குப்பை தொட்டியில் மறைந்து இருந்த அவரை பொலிஸார் மடக்கி பிடித்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.
40 ஆண்டுகள் சிறை
தீவிரமான தாக்குதல் குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலை செய்யப்பட இருந்தார்.
iStock
இந்நிலையில் சமீபத்திய சம்பவத்தை அடுத்து சிறையில் இருந்து தப்பியோடியது மற்றும் இரண்டு கடத்தல் குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக் கொண்டார். இதனால் அவருக்கு நீதிபதி 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இதன் மூலம் அவருடைய 60வது வயதில் தான் சிறையை விட்டு வெளியே சுதந்திரமாக வெளியே செல்ல முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
4 மாதங்களே விடுதலைக்கு மீதம் இருக்கும் நிலையில் எதற்காக இத்தகைய நடவடிக்கையில் அவர் ஈடுபட்டார் என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |