பெட்ரோல் நிலைய கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த இளம்பெண்: பொலிஸார் தேடுதல் வேட்டை
அமெரிக்காவின் டெக்சாஸில் இளம்பெண் ஒருவர் பெட்ரோல் நிலைய பாத்ரூமில் குழந்தை ஒன்றை பெற்றெடுத்து விட்டு அங்கே பிறந்த குழந்தையை விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையை விட்டுச் சென்ற பெண்
கடந்த ஏப்ரலில் டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள ஷெல் கேரேஜ் பெட்ரோல் நிலையத்தில் உள்ள கழிவறையில் இளம்பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பெற்றெடுத்து விட்டு அதை அங்கேயே விட்டுச் சென்றதாக நம்பப்படுகிறது.
பொலிஸாரால் இது தொடர்பாக வெளியிட்டுள்ள சிசிடிவி புகைப்படத்தில் உள்ள இளம் பெண் அருகில் யாரும் இல்லாத நேரமாக கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் கழிவறையை உபயோகித்துள்ளார்.
Houston
அவரை தொடர்ந்து வேறு யாரும் கழிவறைக்கு செல்லாத நிலையில், 1 மணி நேரம் கழித்து கழிவறையை உபயோகிப்பதற்காக அங்கு சென்ற நபர் ஒருவர் குழந்தை ஒன்று தரையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
குழந்தை தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டு மருத்துவ குழு சம்பவ இடத்திற்கு வருவதற்குள் துரதிர்ஷ்டவசமாக குழந்தையை உயிரிழந்தது.
இளம் பெண்ணை தேடி வரும் பொலிஸார்
இந்நிலையில் குழந்தையை பெற்றெடுத்து விட்டு தப்பிச் சென்றதாக கருதப்படும் இளம்பெண்ணை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Houston
இதனிடையே குழந்தை பிறந்ததா அல்லது பிரசவத்திற்கு பிறகு இறந்து விட்டதா என்பது குறித்து துப்பறிவாளர்களுக்கு தெரியவில்லை என ஹூஸ்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விரிவாக விசாரணை நடத்தினால் மட்டுமே சில சிக்கலான கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |