4 முறை ஒலிம்பிக்கில் தங்கம்: 25 வயது அவுஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை அரியர்னே டிட்மஸ் ஓய்வு
அவுஸ்திரேலியாவிற்காக நான்கு முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீச்சல் வீராங்கனை தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
அரியர்னே டிட்மஸ் ஓய்வு
அரியர்னே டிட்மஸ் (Ariarne Titmus) அவுஸ்திரேலியாவிற்காக நான்கு முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற 25 வயது நீச்சல் வீராங்கனை அரியர்னே டிட்மஸ் (Ariarne Titmus) ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
200 மீட்டர் ஃப்ரீஸ்டைலில்(Freestyle) சாதனை படைத்த அரியர்னே டிட்மஸ் இன்ஸ்டாகிராமில் தனது ஓய்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
அதில், நீச்சல் தனது வாழ்நாள் ஆர்வம், நீச்சலை என்னுடைய சிறுவயதில் இருந்து நேசிப்பதாகவும், நீச்சலில் இருந்து விலகிச் செல்வதற்கு இது சரியான நேரம் என்று உணர்வதாகவும், தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது ஒரு கடினமான முடிவு ஆனால் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரியர்னே டிட்மஸ் சாதனைகள்
அரியர்னே டிட்மஸ் தன்னுடைய நீச்சல் வாழ்க்கையில் 8 ஒலிம்பிக் பதக்கங்களுடன், 32 சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளார்.
டோக்கியோ மற்றும் பாரிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் ஃப்ரீஸ்டைலில் இரண்டு முறை தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
அத்துடன் டோக்கியோவில் 200 மீட்டர் ஃப்ரீஸ்டைலில் தங்க பதக்கம் வென்றதுடன், 4X200 மீட்டர் ஃப்ரீஸ்டைலில் ரிலே குழு போட்டியிலும் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |