சாலையில் நடந்த சண்டையில் 4 வயது சிறுவன் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு: பெற்றோர் கண்முன் நடந்த சோகம்
அமெரிக்காவில் சாலையில் நடந்த சண்டையில் 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
4 வயது சிறுவன் உயிரிழப்பு
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லான்காஸ்டர் சாலையில் தம்பதி ஒருவர் தங்கள் 4 வயது மகன் கோர் ஆதம்யனுடன்(Gor Adamyan) காரில் சென்று கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது சாலையில் சண்டையிட்டு கொண்டு இருந்த பைரன் பர்கார்ட்(29), அலெக்ஸாண்ட்ரியா ஜென்டைல் (27), என்ற இரண்டு பேர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதில் காரில் இருந்த குழந்தையின் மீது துப்பாக்கி குண்டு பட்டு உயிருக்கு ஆபத்தான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இதனால் பதறிப்போன அவரது பெற்றோர் சிறுவனை மீட்பு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
Courtesy Adamyan family
ஆனால் பின்னர் குழந்தை மருத்துவமனையில் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து லான்காஸ்டர் மேயர் ஆர். ரெக்ஸ் பாரிஸ் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகள் கைது
இந்த சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சம்பவ இடத்தை சுற்றி வளைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக குற்றவாளிகளான பைரன் பர்கார்ட்(29), மற்றும் அலெக்ஸாண்ட்ரியா ஜென்டைல் (27) இருவரையும் பொலிஸார் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து அவர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |