4ம் ஆண்டை நிறைவு செய்யும் உக்ரைன்-ரஷ்யா போர்: 12 லட்சத்தை தொட்ட வீரர்கள் உயிரிழப்பு
உக்ரைன் போரில் இதுவரை கிட்டத்தட்ட 12 லட்சம் ரஷ்ய வீரர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக உக்ரைன் பாதுகாப்பு படை தகவல் தெரிவித்துள்ளது.
நான்காம் ஆண்டில் உக்ரைன் ரஷ்யா போர்
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி தொடங்கியது.
இந்த போர் நடவடிக்கையானது நாளையுடன் 4 வது ஆண்டை நிறைவு செய்கிறது.
இந்த காலகட்டத்தில் இரு தரப்பிற்கும் இடையே பல முறை அமைதி பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் எந்தவொரு தீர்வும் எட்டப்படாமல் போர் தொடர்ந்து இடைவிடாமல் நடைபெற்று வருகிறது.

12 லட்சம் ரஷ்ய வீரர்கள்
இந்நிலையில் நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் போர் நடவடிக்கையில் இதுவரை கிட்டத்தட்ட 12,60,800 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்து மற்றும் காயமடைந்து இருப்பதாக உக்ரைனிய ஆயுதப்படையின் பொதுப் பணியாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
ரஷ்ய படைகளின் இழப்புகள் குறித்து உக்ரைன் ராணுவம் அவ்வப்போது தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.
ஆனால் ரஷ்யா தனது சொந்த வீரர்களின் இழப்பு குறித்து இதுவரை எந்தவொரு விவரங்களையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |