அமெரிக்கா, ஜப்பானுடன் முத்தரப்பு போர் பயிற்சி: புறக்கணிக்க முடிவு செய்த தென் கொரியா
அமெரிக்கா, ஜப்பான் உடனான வான்வழிப் போர் பயிற்சியை தென் கொரியா புறக்கணித்துள்ளது.
ஜப்பானுடனான மோதல்
ஜப்பானுடனான தீவு விவகாரத்தில் ஏற்பட்டு வரும் மோதல் போக்கு காரணமாக அமெரிக்கா, ஜப்பான் ஆகிய இரு நாடுகளுடனான முத்தரப்பு வான்வழிப் போர் பயிற்சியை தென் கொரியா புறக்கணித்துள்ளது.
இந்த முத்தரப்பு போர் பயிற்சியானது சர்ச்சைக்குரிய நாளன்று அறிவிக்கப்பட்டதே இந்த முடிவுக்கு காரணம் என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
அதாவது, டோக்டோ(Dokdo) தீவுகளின் மீது ஜப்பான் நினைவு கூறும் நினைவு நாளில் இந்த முத்தரப்பு பயிற்சியானது அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தென் கொரியா முன்வைத்த கோரிக்கை
நட்பு நாடுகளுடன் தேவையற்ற ராஜதந்திர விரிசல் ஏற்படுவதை தவிர்க்க, போர் பயிற்சியை வேறு ஒரு திகதிக்கு மாற்றி வைக்குமாறு அமெரிக்காவிடம் தென் கொரியா கோரிக்கை வைத்துள்ளது.
ஆனால் இது தொடர்பாக ஜப்பான், அமெரிக்கா மற்றும் தென் கொரியா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவொரு சுமுகமான தீர்வும் ஏற்படவில்லை.
இதனை அடுத்து, நட்பு நாட்டின் பங்கேற்பு இல்லாமல் வான்வழி பயிற்சியை நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |