பேருந்தில் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக பெண் வெளியிட்ட வீடியோ: ஒரு திடுக் தகவல்
தமிழ்நாட்டின் கேரளா மாநிலத்தில், பேருந்தில் தன்னை ஒருவர் தவறாகத் தொட்டதாக பெண்ணொருவர் வெளியிட்ட வீடியோ வைரலானது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட அந்த ஆண் தன் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
ஒரு திடுக் தகவல்
கேரளாவில் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணொருவர், ஒரு நபர் தன்னை தவறாகத் தொட்டதாகக் கூறி, அவரை தொடர்ந்து வீடியோ எடுத்துள்ளார்.

சமூக ஊடகம் ஒன்றில் அந்த வீடியோவை வெளியிட்ட அந்தப் பெண், இப்படிப்பட்டவர்களை வெளி உலகுக்குக் காட்டவேண்டும் என்பதற்காகவே தான் அந்த வீடியோவை வெளியிடுவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட அந்த ஆண் தன் வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
அந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவத் துவங்கியதைத் தொடர்ந்து, அவர் கடும் மன உளைச்சலுக்குள்ளாகியிருந்ததாக தெரிவித்துள்ள அவரது உறவினர் ஒருவர், அவருக்கு ஆறுதல் கூறி, நாம் சட்டத்தரணியை பார்க்கலாம் என்று கூறியிருந்ததாக தெரிவிக்கிறார்.
ஆனால், மறுநாள் காலை அவர் தன் வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் தவறாக எதுவுமே இல்லை என்று கூறியுள்ள அந்த உறவினர், அந்தப் பெண் சமூக ஊடகங்களில் பிரபலமாவதற்காகவே இப்படி செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்தப் பெண் வெளியிட்ட வீடியோ 2 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ள அதே நேரத்தில், அவருக்கு எதிராகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |