52 வயது காதலனின் பிறப்புறுப்பை வெட்டி கழிவறையில் வீசிய 40 வயது பெண்! ஆழ்ந்த தூக்கத்தில் நடந்த கொடூர சம்பவம்
தைவானில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்த காதலனின் பிறப்புறுப்பு வெட்டி வீசிய கொடூரம் அரங்கேறியுள்ளது.
தைவானின் Changhua கவுண்டியில் இருக்கும் Xihu Township-ல் 52 வயது மதிக்கத்தக்க Huang என்ற நபர் சம்பவ தினத்தன்று நன்றாக மதுவில் ஊறவைத்த கோழி நூடுல்ஸை சாப்பிட்டுவிட்டு ஆழ்ந்த உறக்கத்தில் தூங்கியுள்ளார்.
அதன் பின் அவர் கண்விழித்து பார்த்த போது, ஏதோ இரத்தப் போக்கு ஏற்படுவதைக் கண்டு பார்த்த போது, கடும் அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் அவருடைய பிறப்புறுப்பு வெட்டப்பட்டிருந்தது.
இதை அவருடைய காதலி 40 வயது மதிக்கத்தக்க Phung என்ற பெண்ணே செய்துள்ளார். அன்றைய தினம் சமயலறை கத்தரிக் கோலை பயன்படுத்தி இந்த கொடூரத்தை செய்துள்ளார். அவர் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி, சந்தேகத்தின் பேரில் இப்படி செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரியவந்ததால், விரைந்து வந்த பொலிசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன் பின் Phung-யிடம் விசாரித்த போது, வெட்டி, கழிப்பறையில் வீசிவிட்டதாக கூறியுள்ளார்.
இருப்பினும் மருத்துவர்களால் அதை மீண்டும் இணைக்க முடியவிலை, அந்த வீட்டில் இருந்து இரத்தக் கறையுடைய கத்தரிக்கோலை பொலிசார் கண்டுபிடித்தனர்.
தீயணைப்பு படையின் செய்தித் தொடர்பாளர் உள்ளூர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், காயமடைந்த நபர் அதிக அளவில் இரத்தப்போக்கு கொண்டுள்ளார்.
பொலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த செயலில் ஈடுபட்டவர் மோசமான தாக்குதல் என்ற குற்றச்சாட்டை எதிர் கொள்கிறார்.
குறித்த ஜோடி, சுமார் 10 மாதங்களுக்கு முன்பு ஒன்றாக இருந்துள்ளனர். ஆனால் இடையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதா? வேறு ஏதும் பிரச்சனையா? அந்த பெண்ணே உணவில் மதுவை அதிகம் கலந்து கொடுத்து இந்த செயலை செய்துள்ளாரா? என்பது அடுத்தடுத்த விசாரணையில் தெரியவரும்.
மேலும் குறித்த பெண்ணுக்கு மன அளவில் உளவியல் ஆலோசனை வழங்கப்படவுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட நபரின் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.


