எங்கு பார்த்தாலும் சார்லி சாப்ளின்கள்... சுவிட்சர்லாந்தில் ஒரு சுவாரஸ்ய நிகழ்வு
1800களின் இறுதி ஆண்டுகள் முதல் 1900களின் துவக்கம் வரையிலான ஊமைப்படங்களின் யுகத்தில் புகழ் பெற்றவரான சார்லி சாப்ளின் மறைந்து சுமார் 50 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், அவருக்கு உலகமெங்கும் இன்றும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சாப்ளின் பிரித்தானியாவில், லண்டனில் பிறந்தவர். அவரது நினைவாக லண்டனில் ஒரு அருங்காட்சியகம் இருந்தாலும், சுவிட்சர்லாந்திலுள்ள அருங்காட்சியம்தான் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அவரது ரசிகர்களை ஈர்க்கிறது.

அதற்குக் காரணம் என்னவென்றால், தனது வாழ்வின் கடைசி 25 ஆண்டுகளை சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்தில், ஜெனீவா ஏரியின் கரையில் அமைந்துள்ள Manoir de Ban என்னும் 14 ஏக்கர் எஸ்டேட்டில்தான் தன் குடும்பத்துடன் செலவிட்டார் சாப்ளின்.
எங்கு பார்த்தாலும் சார்லி சாப்ளின்கள்...
Manoir de Ban எஸ்டேட், தற்போது சாப்ளின் நினைவு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், சாப்ளினுடைய நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அவரது அருங்காட்சியகம் முன் கூடினார்கள்.

அந்த சுவிஸ் அருங்காட்சியகத்தில், சாப்ளின் போலவே உடைஅணிந்து, மீசை வைத்து எங்கு பார்த்தாலும் சாப்ளின்களாகவே காணப்படும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகிவருகின்றன.
விடயம் என்னவென்றால், 2017ஆம் ஆண்டு, 662 பேர் சாப்ளின் போல வேடமிட்டு அந்த அருங்காட்சியம் முன் கூடினார்கள்.
இம்முறை 429 பேர் அங்கு கூடியதால், அவர்களால் முந்தைய சாதனையை முறியடிக்கமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |