தமிழ்நாட்டில் முதல்முறையாக 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி! சர்வதேச அளவில் கவனம் ஈர்ப்பு
சர்வதேச அளவிலான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக தமிழ்நாட்டில் நடக்கிறது.
சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் திகதி தொடங்கிய இந்த போட்டி, ஆகத்து 10ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
இதில் உலகம் முழுவதும் இருந்து பல செஸ் வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை துவக்கி வைத்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்.
தமிழகத்தில் செஸ் fever தொடங்கியுள்ளதாகவும், வட மாநிலங்களுடனான போட்டியில் வெற்றி பெற்று தமிழ்நாடு செஸ் போட்டியை நடத்த அனுமதி பெற்றதாகவும் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு வீடியோவை காண
முதலில் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் இந்த போட்டி நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.