பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர்
2025ஆம் ஆண்டில், பிரித்தானியாவிலிருந்து 74,000 இந்தியர்கள் வெளியேறியுள்ளனர். அவர்களில் 45,000 பேர் மாணவ மாணவியர்.
இந்நிலையில், இப்படி பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவியர் வெளியேறிவருவது குறித்து பிரித்தானிய கல்வித்துறையினர் எச்சரித்துள்ளார்கள்.
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்
2025ஆம் ஆண்டில், பிரித்தானியாவிலிருந்து 45,000 இந்திய மாணவர்கள் வெளியேறியுள்ள நிலையில், அது பிரித்தானிய கல்வி அமைப்பை அழுத்தத்திற்குள்ளாக்கியுள்ளதாக கல்வித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியா உட்பட பல நாடுகளில், உள்நாட்டு மாணவர்களைவிட வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்விக்கட்டணம் பல மடங்கு அதிகம் என்பதை பலரும் அறிந்திருக்கலாம்.
ஆக, வெளிநாட்டு மாணவர்கள் செலுத்தும் கூடுதல் கட்டணத்தால்தான் பிரித்தானிய பல்கலைக்கழகங்களால் உள்ளூர் மாணவ மாணவியரிடம் குறைவான கட்டணம் வசூலித்து கல்லூரிகளை நிர்வகிக்க முடிகிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
இப்படியிருக்கும் பட்சத்தில், பிரித்தானியா 2024 முதல் சர்வதேச மாணவர்களுக்கு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.
குறிப்பிட்ட சில மாணவர்கள் தவிர்த்து மற்றவர்கள் தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு அழைத்து வரத் தடை, திறன்மிகுப் பணியாளர்கள் விசாவில் வருபவர்களுக்கான குறைந்தபட்ச வருமான வரம்பு மற்றும் குடும்ப விசா பெறுவதற்கான குறைந்தபட்ச வருமான வரம்பு உயர்த்தப்பட்டது என தொடர்ந்து மாணவ மாணவியருக்கு நெருக்கடி அளிக்கப்பட்டது.
அத்துடன், இந்திய மாணவ மானவியரைப் பொருத்தவரை, படித்து முடித்தபின் குடியமர்வது முக்கியமான இலக்கு. அப்படி இருக்கும்போது, பிரித்தானியாவில் குடியமர முடியுமா, குடும்பத்தை அழைத்துவரமுடியுமா என்னும் விடயங்களிலேயே ஒரு நிலையில்லாத்தன்மை காணப்படும்போது, இப்படி பிரித்தானியாவில் படிப்பதைவிட வேறெங்காவது போய்விடலாம் என முடிவெடுத்துள்ளனர் இந்திய மாணவ மாணவியர்.

அதனால்தான் 45,000 இந்திய மாணவர்கள் பிரித்தானியாவைவிட்டு வெளியேறியுள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், இப்படி ஒரே ஆண்டில் பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவ மாணவியர் வெளியேறியுள்ள நிலையில், இதே நிலை தொடர்ந்தால், அது பிரித்தானிய பல்கலைகளின் வருவாயை பாதிப்பதுடன், பிரித்தானியா கல்வி கற்க சிறந்த இடம் என்னும் பெயரையும் அது பாதிக்கும்.
பிரித்தானியாவுக்கு அதிக அளவில் கல்வி கற்க வருபவர்கள் இந்தியர்கள் என்பதால், அவர்கள் வெளியேறுவதால், நிதிப்பற்றாக்குறை காரணமாக, கல்லூரி ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை, சில பாடப்பிரிவுகளை நிறுத்தும் நிலையும் ஏற்படக்கூடும் என கல்வியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |