அமெரிக்காவிலிருந்து மேலும் இந்தியர்கள் நாடு கடத்தப்படலாம்: வெளியுறவுத்துறை தகவல்
அமெரிக்காவிலிருந்து மேலும் 487 இந்தியர்கள் வெளியேற்றப்படலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியர்களை திருப்பி அனுப்பிய இந்தியா
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாகச் சந்தேகிக்கப்படும் 104 இந்தியர்களை அமெரிக்கா சில நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது.
இந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி டெல்லியில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ''அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள் மோசமாக நடத்தப்பட்டது குறித்து அமெரிக்காவிடம் கவலை தெரிவித்தோம்.
இது போன்ற செயலை தவிர்த்திருக்கலாம் எனக் கூறினோம். நாடுகடத்தப்படுபவர்களைத் தவறாக நடத்தக்கூடாது என்று அமெரிக்க அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்'' என்றார்.
மேலும் நாடு கடத்தப்பட இருக்கும் இந்தியர்கள்
இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து மேலும் 487 இந்தியர்கள் வெளியேற்றப்படலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து மேலும் 487 இந்தியர்கள் நாடு கடத்தப்பட இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
அவர்களில் 298 பேரின் விவரங்கள் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. அந்தத் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன'' என விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |