பிரான்ஸில் 5.8 ரிக்டர் அளவில் வலுவான நிலநடுக்கம்: பாதிப்புகள் என்னென்ன!
வெள்ளிக்கிழமை மாலை மேற்கு பிரான்ஸின் பெரும்பாலான பகுதியை 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
பிரான்ஸில் நிலநடுக்கம்
5.8 ரிக்டர் என்ற அளவிலான வலுவான நிலநடுக்கம் மேற்கு பிரான்ஸின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பதிவாகி இருப்பதாக பிரான்ஸ் மத்திய நிலநடுக்கவியல் பணியகம் (BCSF) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சுற்றுச்சூழல் மாற்றம் துறை அமைச்சர் கிறிஸ்டோஃப் பெச்சு வழங்கிய தகவலில், நாட்டின் நிலப்பரப்பில் பதிவான வலுவான நிலநடுக்கங்களில் ஒன்று இது என தெரிவித்துள்ளார்.
AFPயின் தரவுகள் படி, பிரான்ஸ் இது போன்ற வலுவான நிலநடுக்கம் 2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் ஏற்பட்டு இருப்பதாக காட்டுகிறது. இந்த நிலநடுக்கத்தை 5.3 ரிக்டர் என்ற அளவில் நில அதிர்வு கண்காணிப்புக்கான தேசிய வலையமைப்பான RENASS பதிவு செய்தது.
ஆனால் அவற்றை திருத்து நிலநடுக்கம் 5.8 ரிக்டர் என்ற அளவில் ஏற்பட்டு இருப்பதாக பிரான்ஸ் மத்திய நிலநடுக்கவியல் பணியகம் (BCSF) தெரிவித்துள்ளது.
நிலநடுக்க மையம் பிரான்ஸ் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள சாரெண்டே-மரிடையம் பகுதியில் 10 கிமீ ஆழத்தில் இருந்ததாக GFZ தெரிவித்துள்ளது.
L’Ouest de la France a été frappé par un séisme puissant, dont l'évaluation est en cours mais estimée à environ 5,8 sur l'échelle de Richter.
— Christophe Béchu (@ChristopheBechu) June 16, 2023
Jusqu'à présent, un blessé léger a été pris en charge par les secours et de nombreux cas de chutes de pierres et de fissures ont été… pic.twitter.com/4TWWTLxYpa
பாதிப்புகள்
பிரான்ஸில் ஏற்பட்ட இந்த திடீர் நிலநடுக்கத்தில் Deux-Sevres பிரிவில் ஒருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது, ஆனால் அவருக்கு அந்த இடத்திலேயே சிகிச்சை வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தால் தென்மேற்கு பகுதியில் உள்ள கட்டிடங்கள் சில பலத்த சேதமடைந்துள்ளன, கட்டிடங்கள் சிலவற்றில் இருந்து கற்கள் கீழே விழுந்ததுடன் மட்டுமல்லாமல் கட்டிடங்களின் சுவர்களில் விரிசல்களும் ஏற்பட்டு இருப்பதாக மாகாண அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 1100 வீடுகள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருளுக்குள் மூழ்கியது. இந்த நிலநடுக்கம் பிரான்ஸின் வடக்கே ரென்னெஸ் மற்றும் தென்மேற்கே போர்டியாக்ஸ் வரை உணரப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |