IPL-க்கு Bye, Bye! PSL தொடரை தேர்ந்தெடுத்த 5 நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள்
உலக அளவில் ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் தொடர்களில் இந்தியன் பிரீமியர் லீக்(IPL) அதிக சுவாரஸ்சியம் மற்றும் சவால் நிறைந்த தொடராக பார்க்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த ஆண்டு அவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட தொடங்கியுள்ளது, அதாவது ஐபிஎல்-லில் நீண்ட கால நட்சத்திர வீரர்களாக இருந்து வந்த பலர் தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் தொடரில் தங்கள் பங்களிப்பை வழங்க ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன.
ஒரே நேரத்தில் நடத்தப்படும் தொடர், மற்றும் புதிய சவால்களை தேடுதல் ஆகியவை இவற்றுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
PSL தொடருக்கு செல்லும் 5 முக்கிய வீரர்கள்
ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ்(Faf du Plessis)

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் போன்ற அணிகளின் முக்கிய வீரராக இருந்த ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் 2026ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் இருந்து தனது பெயர்களை விலக்கிக் கொண்டுள்ளார்.
அத்துடன் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் மட்டுமே கவனம் செலுத்த போவதாக அவர் அறிவித்துள்ளார்.
டேவிட் வார்னர்(David Warner)
அவுஸ்திரேலியாவின் மிரட்டல் ஒப்பனரான டேவிட் வார்னர் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் விற்கப்படாமல் போன பிறகு, டேவிட் வார்னர் தன்னுடைய பெயரை PSL 10 சீசனுக்கான வரைவு பட்டியலில் இணைத்து கொண்டார்.

அவர் தற்போது கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.
கேன் வில்லியம்சன்(Kane Williamson)
நியூசிலாந்து அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக கருதப்படும் கேன் வில்லியம்சன், 2025 மெகா ஏலத்தில் விற்கப்படாமல் போன பிறகு, PSL தொடரில் தனக்கான புதிய இடத்தை பிடித்துள்ளார்.

கேன் வில்லியம்சன் ஐபிஎல் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பையை வென்றவரும், ஹைதராபாத் அணியின் முன்னாள் கேப்டனும் ஆவார்.
டாம் கரன்(Tom Curran)
ஐபிஎல்-லில் பல அணிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட வீரர்களில் ஒருவரான டாம் கரன், PSL தொடரில் பங்கேற்க உள்ளார்.

மொயீன் அலி(Moeen Ali)
இங்கிலாந்து அணியின் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான மொயீன் அலி, 2026 PSL தொடரில் தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் RCB, CSk ஆகிய அணிகளில் முதன்மை வீரர்களில் ஒருவராக விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |