16 மாதங்களில் 5 முறை மாரடைப்பு.., 51 வயது பெண்ணுக்கு நிகழும் மர்மம்
16 மாதங்களில் 5 முறை மாரடைப்பு ஏற்பட்டதால் 51 வயது பெண் ஒருவர் காரணம் தெரியாமல் குழம்பி போயுள்ளார்.
5 முறை மாரடைப்பு
தற்போது மாரடைப்பு பற்றி பல தகவல்கள் பரவிவரும் நிலையில், மக்கள் அச்சத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. மும்பையைச் சேர்ந்த பெயர் குறிப்பிடாத பெண் ஒருவருக்கு 16 மாதங்களில் 5 முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இவருக்கு, ஐந்து ஆஞ்சியோபிளாஸ்டி, ஒரு பைபாஸ் சர்ஜரி செய்தது மட்டுமல்லாமல் ஐந்து ஸ்டென்டுகளும் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில், தொடர்ந்து மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணம் குறித்து அந்த பெண் குழப்பமடைந்துள்ளார்.
இதனை தவிர, நீரிழிவு, அதிக கொழுப்பு மற்றும் உடல் பருமன் ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்துள்ளார். செப்டம்பர் 2022 -ம் ஆண்டு 107 கிலோ எடையுடன் இருந்த இந்த பெண், தற்போது 30 கிலோ எடையை குறைத்துள்ளார்.
மேலும், இவருக்கு கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு `பிசிஎஸ்கே9 இன்ஹிபிட்டர்' என்ற ஊசி போடப்பட்டுள்ளது. இதனால், தனக்கு தொடர்ந்து மாரடைப்பு ஏற்படுவதால் என்ன தான் பிரச்னை இருக்கிறது என வேதனையில் உள்ளார்.
இதய பிரச்னை?
பெண்ணின் இதய பிரச்னைகளுக்கான காரணம் மர்மமாக இருக்கும் நிலையில், மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசிக்கையில் `vasculitis' என்ற நோயாக கூட இருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.
மேலும், இவருக்கு வெவ்வேறு இடங்களில் புதிய அடைப்புகள் உருவாகின்றன. இதனால், தொடர்ந்து மாரடைப்புக்கான அறிகுறிகள் தோன்றுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |