OPS -க்கு வந்த சோதனை.., ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் 5 சுயேட்சை வேட்பாளர்கள்
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே பெயரில் 5 வேட்பாளர்கள்
மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு பாஜகவில் சீட் ஒதுக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.
இதனால் தனது பலத்தை நிரூபிக்க ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்நிலையில், நேற்று ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அதிமுக சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதனிடையே, ராமநாதபுரம் தொகுதியில் நேற்று மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்ற சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இன்று ஒரே நாளில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் ராமநாதபுரம் தொகுதியில் ஒரே பெயரில் 5 பேர் சுயேட்சை வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர்.
இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கூறுகையில், வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த செயல்படுத்துவதற்காக தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |